10 June, 2009

......


தனிமை கலைத்ததற்காய்
கடிந்து கொள்ளும் காதலர்கள்...
அழுக்கேறிய ஆடைகண்டு
முகம்சுழித்து விலகும்
அழகிய குழந்தைகளின் அம்மாக்கள்..
சிப்பிகள் பொறுக்குவதைச்
சிலநொடிகள் நிறுத்திவிட்டு
சிநேகமாய்ச் சிரிக்கும் சிறுமி...
கடல் வெறித்தபடி
தனிமையில் அழும்
தாடிவைத்த இளைஞன்...
பட்டம் விட்டு விளையாடும்
ஒத்த வயதுச் சிறுவர்கள்...
முகத்தில் சலனமற்று
அனைவரையும் கடக்கிறான்
சுண்டல் விற்கும் சிறுவன்...
என் கவிதைகளுக்குத்தான்
பக்குவம் போதவில்லை
இன்னும்.

7 comments:

  1. அருமையான வெளிப்பாடு.
    இறுதி வரிகளில் எனக்கு உடன்பாடு இல்லை, பைபிளில் வரும் வசனம் போல இருக்கிறது. (தன்னைத் தாழ்த்துகிறவன் எவனோ அவனே உயர்வடைகிறான்)

    நல்ல கவிதை

    ‘அகநாழிகை‘
    பொன்.வாசுதேவன்

    ReplyDelete
  2. நல்லா இருக்குக் கவிதை!

    வாசு சார் சொன்னது போல் முடிவு சின்ன மாற்றமா உள்ளது!! (ஒரு வேலை அவர் இதை சொல்லிரா விட்டால் நானும் ஒரு வரியோடு போகிருகக் கூடும்)

    ReplyDelete
  3. பார்த்த அனுபவமில்லையென்றாலும் அதே உணர்வை கவிதையில் கொண்டு வந்து விட்டீர்கள் ப்ரியா பாரட்டுக்கள்.. :-)

    ReplyDelete
  4. //கடல் வெறித்தபடி
    தனிமையில் அழும்
    தாடிவைத்த இளைஞன்...//

    :-((((

    ReplyDelete