13 July, 2009

.........

பேசத் துவங்காத குழந்தையொன்று
தொடர்ந்தோடுகிறது
பேசுதல் வாய்க்காத
வண்ணத்துப்பூச்சியை...
ஓயாமல் பேசிச் செல்கிறது
அழுந்துகையில் ஒலியெழுப்பும்
குழந்தையின் காலணி
.

17 comments:

  1. விடுப்பு முடிந்து உங்கள் வருகை மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது
    நல்ல படைப்புடன் வந்திருக்கிறீர்கள்
    ஒரு நிகழ்வை கவிதையாக்கும் உங்களின் திறன் மிளிர்கிறது....!

    ReplyDelete
  2. ம்ம்ம் வந்துட்டீங்களா???சத்தத்தோடு!!!!
    வாங்க! வாங்க!

    ReplyDelete
  3. கவிதை மிளிர்கிறது

    ReplyDelete
  4. நன்று. குழந்தை என்னும் சொல்லே கவிதை தான். அது சரி, தலைப்பு இன்னமும் வைக்கலியோ?

    ReplyDelete
  5. கௌரிப்ரியா,
    கவிதை நன்றாக இருக்கிறது.
    (படிப்பதற்கு இடையில்)தொடர்ந்து எழுதுங்கள்.

    ‘அகநாழிகை‘
    பொன்.வாசுதேவன்

    ReplyDelete
  6. கவிதை நன்று கௌரி வாழ்த்துகள்

    தொடர்ந்து எழுதுங்கள்

    ReplyDelete
  7. உங்களுடைய பிற பதிவுகள் போல மிக அருமை எனச் சொல்லிவிட முடியாது ...
    ஆனாலும் நன்று!! :)

    ReplyDelete
  8. தத்திச் செல்லும்
    முகம் மறைத்த மழலையின்
    மொழியினை...
    உணர்வாக்கிய கவிக்கு நன்றி.

    ReplyDelete
  9. நல்லாருக்குங்க கவிதை. தங்கள் வலைக்கு இப்பொழுதுதான் ஆதவா அவர்களின் அறிமுகத்தால் வருகிறேன். வாழ்த்துகள்.

    ReplyDelete
  10. பூங்கொத்துக்களுடன் விருதும் கொடுத்திருக்கேன் ....வாங்கிக்கோங்க!!

    ReplyDelete
  11. நல்லா இருக்குங்க..

    ReplyDelete
  12. வெகு நாட்களுக்கு பிறகு..உங்கள் வலை பக்கத்துக்கு வருகிறேன்..
    வந்ததும் வரவேற்கிறது...ஒலியெழுப்பும் குழந்தையின்..காலணி...
    நன்றி..!

    ReplyDelete