23 May, 2009

தேடல்

பாடுபொருளாகவே
பழகிச் சலித்த மழை
பருத்த பலாவேர்களினூடே
உதிர்த்துச் சென்றிருந்தது
உவமேயங்களை..

தேவதைக் கதைகளில்
விளையாடும் சிறுமிகளின்
வெண்பட்டாடை..
வெடித்துக் காற்றேகும் பருத்தி..
வெண் மயிற்பீலி சாமரம்..
தொடுதலில் சிலிர்த்து
விசிறியாய் விரியும்
சிசுவொன்றின் மென்பாதமென..
காளான்களுக்குவமை தேடி
கவிதைப் பெருவெளியில்
கரைந்து தொலைந்தேன் நான்..

4 comments:

  1. மழைக்கால காளான்களின் உவமை அழகு :-)

    ReplyDelete
  2. உங்களது அதிகக் கவிதைகளில் கூடவே அழகு மழை வருகிறது..உங்கள் வரிகளில் இன்னும் அழகு.

    ReplyDelete
  3. புனிதா,ரிஷான்...
    கருத்துகட்கு நன்றி :))))))

    ReplyDelete
  4. //தொடுதலில் சிலிர்த்து
    விசிறியாய் விரியும்
    சிசுவொன்றின் மென்பாதமென..//

    மிகவும் ரசித்தேன்...

    ReplyDelete