23 May, 2009

வெற்றிட நிரப்பிகள்

ஊதா நிறப் பூக்களை

உதிர்த்திருந்த மரத்தை

பெருமழையொன்று

பெயர்த்தெறிந்த நாளில்

பிரிவறிவித்தாய் நீ...


மரம், மழை

நான், நீயென

காட்சிகள் குழம்பிய

அன்றிரவின் கனவில்..

விடுதலிலோ விடுபடுதலிலோ

விருப்பமற்றுக்

கவிதையின் மடியமர்ந்து

வெறுமையின் வெளிதனை

வெறித்திருந்தேன்..


விடியலில் ஓர்

பாடுபொருளுக்கான வெற்றிடம்

வெறுமை கொண்டே

நிரப்பப்படுகையில்..

எல்லோரும் அழைத்தாலும்

எனக்கு மனமில்லை

பெருமழையைப்

பேய்மழையென்றழைக்க.

http://youthful.vikatan.com/youth/gowripriyapoem25052009.asp

http://www.uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=1433

நன்றி: யூத்புல் விகடன், உயிர்மை






8 comments:

  1. //விடுதலிலோ விடுபடுதலிலோ
    விருப்பமற்றுக்
    கவிதையின் மடியமர்ந்து
    வெறுமையின் வெளிதனை
    வெறித்திருந்தேன்..//

    பல நேரங்களில் என் நிலையும் இப்படித்தான் உள்ளது..தங்களின் வார்த்தைகள் அருமை..கவிநயமும் அழகு :-)

    ReplyDelete
  2. பக்குவப்பட்ட காதலுக்கு எப்படி மனம் வரும், பெயர்த்தெடுத்தாலும் "பேய்மழை" என்றழைக்க!

    அழகாக கோர்க்கப் பட்ட வார்த்தைகள் கவனம் ஈர்க்கின்றன.

    ReplyDelete
  3. edkukaigal monaigal... alagaaga koarkap petrirukkum kavithai

    uthir...oothaaa
    vidu..viruppam
    perumalai .. peyartherindha.. pirivu
    ellorum .. enakku...

    vaazhthukkal

    -nesamithran
    http://nesamithran.blogspot.com/

    ReplyDelete
  4. புனிதா..கிர்பால்...நேசமித்ரன்..
    வாசிப்புக்கும் விமர்சனங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்

    ReplyDelete
  5. கவிதைகள் ரொம்ப நல்லா இருக்கு...

    யூத்புல் விகடன், உயிர்மையில்
    கவிதை வெளியானதற்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. எனக்கும் மனமில்லை

    பெருமழையைப்

    பேய்மழையென்றழைக்க.

    ReplyDelete