11 June, 2009

வண்ணத்துப்பூச்சிக்காரர்களின் வண்ணத்துப்பூச்சிகள்

முந்தைய பதிவின் வண்ணத்துப்பூச்சிக்காரர்களின் வண்ணத்துப்பூச்சிகளை வலிக்காமல் எடுத்து வந்து இங்கு ஒட்டியிருக்கிறேன் (அதாங்க copy paste).

கார்த்தி
உன் நினைவூறிக் களைத்துக்
கிறுக்கிக் கிடந்த
தினமொன்றின் பின்னிரவில்...

என் சன்னல் கம்பியில்
ஒரு பட்டாம்பூச்சி வந்தமர்வதற்கும்
வெளியே
அடைமழை தொடங்குவதற்கும்
சரியாக இருந்தது...

நான் எழுதுவதை அத்தோடு
நிறுத்தினேன்...

தொடர்பவர்கள்
என்னைப் பட்டாம்பூச்சியென்றும்
உன்னை மழையெனவும்
உருவகித்துவிடக் கூடும்....

கார்த்திகா
பொக்கெட் ஷாப்பில்...
கண்ணாடிக் கதவில்
முட்டிக் கொண்டிருக்கும்
வண்ணத்துப்பூச்சி.

லக்ஷ்மி ஸாஹம்பரி
பத்திரமாய் படிந்திருக்கிறது
பட்டாம்பூச்சியின் வண்ணங்கள்
பழுப்பேறிய நோட்டுப்பக்கங்களில்..
இதுவே போதுமானது
உயிரைப்பிழியும் என் தனிமையை
வரைதலில் எடுத்துரைக்க

இளங்கோ
சற்று முன்
ஒரு பட்டாம்பூச்சியை
வெளியேற்றி
பிய்ந்துத் தொங்கும்
பாதி லார்வாவின்
காம்புக்கு
பக்கத்தில்..
வெடிக்கக் கூடும்
ஒரு
ரோஜா மொக்கு..!

நேசமித்ரன்
வண்ணத்து பூச்சி பார்க்க
தோழியரோடு வந்திருக்கும்
இச்சிறுமிக்கு எப்படித் தருவது
ஏமாற்றத்தை ?

மருந்தடித்த காடு.....!

நளன்
ஏனோ இதுவரை எந்த பட்டாம்பூச்சியும்
வலிய வந்து என் தோள் அம‌ர்ந்ததில்லை
சிறுவய‌தில் துரத்திகொண்டு
ஓடிய‌போது என்மேல்
இவைகளுக்கு ஏற்பட்ட பயம்
இன்னும் இருக்கும்போல..
அதன் வ‌ண்ண‌ங்க‌ள் மேல் என‌க்கு
ஒருவித பொறாமை இருப்பினும்
அவ‌ற்றை புழுக்க‌ளோடு ஒப்பிட்டு பார்த்த‌தில்லை..
எப்பொழுதும் எதையோ தேடியவாறு
மிதந்து அலைகின்ற‌ன‌ ந‌ம் ம‌ன‌ம்போல‌வே..
சில நேரம் அசைபோடும் உன் நினைவுகள்
இவ‌ற்றின் ப‌ய‌ங்க‌ளை போக்குவ‌து குறித்த
க‌ருத்திய‌ல்களை த‌ற்காலிக‌மாக
ஒத்திவைத்துவிடுவ‌துண்டு
அன்று ப‌ச்சை கொட்டியிருக்கும் புல்வெளியில்
களைப்பாற வானம் பார்த்து ப‌டுத்திருந்தேன்
வந்து தோள‌மர்ந்த‌து
என‌க்கான‌ முத‌ல் பட்டாம்பூச்சி..
த‌னித்து கிட‌க்கும் ம‌ல‌ர்கள்
நான் போய் அம‌ர‌ தேனை ப‌ரிச‌ளிக்கும் என‌க்கு
நீ என‌க்காக‌ என்ன‌ வைத்துள்ளாய் என
சன்னமாய் யது கேட்ட‌போது
சொல்வத‌றியாம‌ல் சிறிதாக சிரித்தேன்
அது என் புன்ன‌கையை
க‌ட‌த்திகொண்டு ப‌றந்தோடிவிட்ட‌து


9 comments:

 1. இந்த கவிதைக்கு என்னை விட மகிழ்ந்தவர் யார் இருக்க முடியும்..??

  சிறகடிக்க செய்தமைக்கு நன்றிகள்.

  ReplyDelete
 2. அனைவரின் கவிதையும் அருமை. தொகுத்தமைக்கு நன்றி

  ReplyDelete
 3. தோட்டத்தில் படபடக்கும்
  நகரும் வண்ணத்துப் பூச்சியைவிட,
  என் பிள்ளை கிறுக்கிய
  நகராத வண்ணத்துப் பூச்சி,
  மிக அழகு!

  ReplyDelete
 4. வெறும் மாந்தர் எம்மையும் இறுமாந்து களிக்க
  ஒரு மாது மருத்துவக் கவிதாயினி
  கவி கூர்ந்து ஆய்ந்து
  ஒளிச் சிறகில் விண்மீன் பொறித்தபடி
  புவி போற்ற பறக்கும்
  ஒரு பட்டாம் பூச்சியை விருதாக்கினார்
  விதி முறைப்படி மதி நிறைந்த கவிஎழுதும்
  புதிய தொரு பதிவர்க்கு வழங்கி நாமும் தொடர்வோம்
  அதி அற்புத பொழுது இது .....!

  மிக்க நன்றி தோழி

  ReplyDelete
 5. டாக்டர்னா ஊசி போடுற டாக்டரா? தமிழ்மொழில PHD யா?

  ReplyDelete
 6. @வண்ணத்துபூச்சியார்
  புனிதா
  சென்ஷி
  SUMAZLA/சுமஜ்லா
  NESAMITHRAN..
  அனைவருக்கும் நன்றி

  @நர்சிம்
  :))

  ReplyDelete
 7. உங்களது "வண்ணத்துப்பூச்சிக்காரர்களின் வண்ணத்துப்பூச்சிகளிலுள்ள" இரண்டு வண்ணத்துப்பூச்சிகளையும் சேர்த்து அனைத்து வண்ணத்துப்பூச்சிகளும் மிக மிக அழகு.

  ReplyDelete