11 June, 2009

பட்டாம்பூச்சி


கவிதையல்லாத என் முதல் பதிவு இது.. "நீ" வலைப்பூவில் இருந்து இங்கு வந்திருக்கும் பட்டாம்பூச்சிக்கானது.. அனுப்பிய கார்த்தி அவர்களுக்கு நன்றி, என் profile படத்தை நிஜமாக்கியதற்கு..
அடுத்து, பட்டாம்பூச்சியை யாருக்கெல்லாம் அனுப்புவது?? மூன்றிற்கும் மேல் அனுப்ப வேண்டும் என்ற விதிமுறை என் குழப்பத்தைக் குறைப்பதால் எனக்கு அதைப் பிடித்திருக்கிறது.. வலப்புறம் உள்ள நனைவிப்போர் பட்டியலில் அனைவருக்கும் அனுப்ப ஆசை.. என்றாலும்,நிறைய பேர் ஏற்கனவே தம் வசம் ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட பட்டாம்பூச்சிகளை வைத்திருப்பதால் இந்த ஆறு பேருக்கும்..

நேயமுகில் கார்த்திகா... என் மனதுக்குப் பிடித்த பாடுபொருட்கள் பலவற்றை இவரது மெல்லிய கவிதைகளில் கண்டுகொண்டேன்..
நிலாக்காலம் லக்ஷ்மி சாஹம்பரி... எனக்கு மிகவும் பிடித்த கவிஞர்.. சமீபத்தில் இவர் எழுதவில்லை.. மீண்டும் வரக் காத்திருக்கிறேன்.
ஜீவநதி யின் ஜீவராஜ் தங்கராசா... கவிதைகள், சமூக நோக்குள்ள பதிவுகள், இலங்கையில் இவர் எடுத்த புகைப்படங்களின் தொகுப்புகள் , மருத்துவக் குறிப்புகள்,கவர்ந்த மனிதர்கள் என நிறைய விஷயங்களை அழகிய தமிழில் பகிர்ந்து கொள்கிறார்.
கவிதைக்காரன்டைரி இளங்கோ... குறுகிய அடிகள் மற்றும் வித்தியாசமான கற்பனைகள் கொண்ட கவிதைகள் எழுதுகிறார்... நான்கு மாதங்களில் இருநூறு கவிதைகள் பதிந்திருக்கிறார்..
நேசமித்ரன் கவிதைகள்... இவரின் கவிதைகள் மிகவும் ஆழமானவை.. ஈழத்தின் வலிகளைப் பதிந்து வருகிறார்...
நளன் என்கிற குட்டிச்செல்வன்... மென்சோகம் இழையோடும் அமைதியான கவிதைகளின் சொந்தக்காரர்.

பிறந்தநாள் மகிழ்ச்சியைக் குட்டிக் குட்டியாய் உடைத்து வண்ணக் காகிதத்தில் சுற்றி மிட்டாயுடன் நீட்டும் ஒரு சிறுமியின் மகிழ்ச்சியுடன் உங்களுக்கான வண்ணத்துப்பூச்சிகளை அனுப்புகிறேன். நன்றி

நீங்கள் பின்பற்ற வேண்டிய பட்டாம்பூச்சி விருதின் விதிகள்:
1. இந்த பட்டாம்பூச்சி இலச்சினை உங்கள் பதிவு பக்கத்தில் இருக்க வேண்டும்
2. உங்களுக்கு விருது கொடுத்த நபரின் இணையதள முகவரிக்கு ஒரு இணைப்பு கொடுக்க வேண்டும்
3. மூன்று அல்லது அதற்கு மேலான பதிவர்களைத் தேர்வு செய்ய வேண்டும்
4. தேர்வுசெய்யப்பட்ட பதிவுகளிற்கு உங்கள் பதிவில் இருந்து இணைப்பு தர வேண்டும்
5. நீங்கள் தேர்ந்தெடுத்த பதிவுகளில் அவர்களுக்கு இச்செய்தியை தெரிவிக்க வேண்டும்
நீங்களும் உங்களுக்கு பிடிச்ச பதிவர்களின் பூக்கள்ல பட்டாம்பூச்சியை பறக்க விடுமாறு கேட்டுக்கறேன்!

6 comments:

  1. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. சந்தோசமான வாழ்த்துக்கள்... தூறல்வெளியில் தொடர்ந்து நனையக் காத்திருக்கிறோம்...


    ///பிறந்தநாள் மகிழ்ச்சியைக் குட்டிக் குட்டியாய் உடைத்து வண்ணக் காகிதத்தில் சுற்றி மிட்டாயுடன் நீட்டும் ஒரு சிறுமியின் மகிழ்ச்சியுடன் இவர்களுக்கான வண்ணத்துப்பூச்சிகளை அனுப்புகிறேன்.///

    மிக்க நன்றி உங்கள் அன்பிற்கு...

    நட்புடன் ஜீவன்

    ReplyDelete
  3. பட்டாம்பூச்சி விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. நர்சிம்
    த.ஜீவராஜ்
    ஆ.முத்துராமலிங்கம்
    புதியவன்

    வாழ்த்துகளுக்கு மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  5. பட்டாம்பூச்சியின் சிறகை...
    அதன் கண்ணாடி இழையூடே பரவும் வண்ணங்களை..
    விருதாக அனுப்பி வைத்த இனியத் தோழிக்கு...
    என் ரகசியத் தோட்டத்திலிருந்து.. ஒரு கொத்து மலர்கள்..
    அன்பின் காணிக்கை..!

    ReplyDelete